மறுமலர்ச்சி என்பதனால் நீர் விளங்கிக்கொள்வதென்ன?
13ஆம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் பழமையான கிரேக்க உரோம கருவூலங்களைக் கற்பதில் ஆர்வம் ஏற்பட்டுக்கொண்டது. இதனால் மத்தியகால ஐரோப்பிய சமூக பொருளாதார அரசியல் துறைகளில் தொடர்ச்சியான பல மாற்றங்கள் ஏற்பட்டு ஐரோப்பாவில் புதியநாகரிகம் தோன்றியது. இதுவே மறுமலர்ச்சி அழைக்கப்படுகின்றது. எனினும்
வரலாற்றாசிரியர்கள் தத்தமது கொள்கை நோக்கம் என்பனவற்றை அடிப்படையாகக்கொண்டு வெவ்வேறுபட்ட விளக்கங்களை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
15ஆம் 16ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் அரசியல் பொருளாதாரம் சமயம் விஞ்ஞானம் இலக்கியம் கலை போன்ற துறைகளில் ஏற்பட்ட எழுச்சி மற்றும் வெளிப்பாடுகள் மறுமலர்ச்சியாகும்.
பழைய சாஸ்திர அறிவினை மீண்டும் உயிர்ப்பூட்டுவதனூடாக சுதந்திரமாக
சிந்திப்பதற்கும் செயலாற்றுவதற்கும் விடயங்களை தர்க்கரீதியாக விசாரிப்பதற்கும் உண்டான புதிய உத்வேகம் மறுமலர்ச்சியாகும்
மத்திய காலத்திலிருந்து ஐரோப்பா நவீனகாலத்திற்கு மாற்றம் பெறுதல் ஐரேப்பிய மறுலர்ச்சி எனப்படும்.
மறுமலர்ச்சிக்கான காரணங்களை விளக்குக?
கொன்ஸாந்தநோபிளை துருக்கியா கைப்பற்றியமை - 1453
ஐரோப்பாவின் பிரதான வர்த்தகத்தளமான கொன்ஸாந்துநோபிளைத் துருக்கியர் கைப்பற்றிக்கொண்டமை. இதனால் கிழக்கு ரோமப்பேரரசில் வாழ்ந்த மக்கள் மேற்குப்பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் ரோம மக்களின் கலைப்பொக்கிசங்களை இளலோமியர்களிடமிருந்து பாதுகாக்கவேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டுக்கொண்டது. இதனால்
கிறிஸ்தவகல்விமான்கள் கிழக்குரோமப்பேரரசின் தலைநகரான கொன்ஸாந்துநோபிளில் பாதுகாக்கப்பட்டுவந்த கிரேக்க உரோமக்
கருவலங்களை எடுத்துக்கொண்டு மேற்கு ஐரோப்பாவிற்கு தப்பிச்சென்றனர். ஆங்கிருந்துகொண்டு அவற்றை ஆராய்ந்து புதிய கருத்துக்கள் கொள்கைகள் என்பனவற்றை வெளியிட்டனர். இதனால் கிரேக்க உரோம கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன.
நாடுகாண் பயணங்கள்
கொன்ஸாந்துநோபிளை துருக்கியர் கைப்பற்றிய பின்னர் அந்நகரை மையமாகக்கொண்டு நெடுங்காலமாக நடைபெற்றுவந்த கீழைத்தேய மேலைத்தேய நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டிருந்தது. கடல் மற்றும் தரைமார்க்க வர்த்தகப்பாதைகள் அனைத்தும் உதுமானிய
துருக்கியப்பேரரசின் வசமாகின. இதனால் கீழைத்தேச வர்த்தகப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் ஐரோப்பியருக்கு பெரும்
வர்த்தகப்பாதைகளைக் கண்டுபிடிக்கவேண்டியது அவசியமாகியது. இந்தவகையில் நீண்ட கடல்வழிப்பிரயாணங்களை மேற்கொண்டு புதிய நாடுகளை கண்டுபிடிப்பதில் ஐரோப்பியர் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட
மூலப்பொருட்கள் செல்வங்கள் இந்த மறுமலர்ச்சிக்காக ஐரோப்பிய மறுமலர்ச்சி யுத்தம் வளர்ச்சி பெற நாடுகாண் பயணங்கள் துணைபுரிந்தன.
நகரங்களின் செல்வாக்கு
15ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஐரோப்பாவில் சரசென், பைசாந்தினி போன்ற நகரங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன.இந்த நகரங்களில் புதிய ஐரோப்பியகலாசாரம் தோன்றுவதற்கான சூல்நிலைகள் சாதகமாக காணப்பட்டன. இந்த நகரங்களில் வாழ்ந்த மக்கள் சுயமாகவும் சுதந்திரமாகவும் சிந்திக்க தலைப்பட்டனர். மேலும் இந்நகரங்களில்
மேற்கொண்டுவந்த வாழ்வாதார தொழில்கள் கைவிடப்பட்டு வர்த்தக நடவடிக்கைகளில் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறைகளும் வளர்ச்சி பெற்றிருந்தன. முன்னர் மக்கள் நாட்டம் ஏற்பட்டுக்கொண்டது. இதன்
வர்த்தகவகுப்பினர் தோற்றம் பெற்றுக்கொண்டனர். செல்வந்தர்களான இவர்கள் கல்வி ஆராய்ச்சி என்பவற்றுக்காக பெருமளவு நிதியுதவி வழங்கி ஆதரவளித்தனர். இத்தாலியின் புளோரன்ஸ் நகரில்வாழ்ந்த மெக்ஸி, என்ற வர்த்தக குடும்பம் மறுமலர்ச்சிக்கு வழிகளில் உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் மறுமலர்ச்சி துரிதப்படுத்தப்பட்டது.
பல்கலைக்கழகங்களின் தோற்றம்
சமகாலத்தில் ஐரோப்பாவில் காணப்பட்ட பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு
மறுமலர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கச் செய்திருந்தது. விஞ்ஞானம் மருத்துவம் வானியல் மெய்யியல் சட்டம் என்பனவற்றை முக்கியத்துவப்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் புதிய விதிகள் கொள்கைகள் கண்டுபிடிப்புக்கள் வெளிக்கொணரப்பட்டன.. மறுமலர்ச்சிக்கு பங்களிப்பு செய்த பல்கலைக்கழகங்களுள் இத்தாலியின் பொலஞ்சா பதுவா
பிரான்சின் பாரீஸ் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் கேம்பிரிச் போன்றன குறிப்பிடத்தக்கவை. இப்பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் விஞ்ஞானம் சார்ந்ததாக மட்டும் இருக்கவில்லை. சகல துறைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எந்த விடயத்தையும்
ஆய்வுசெய்யும்போதும் அந்த ஆய்வுகள் தர்க்கரியாக ஏன்? எதற்கு? எப்படி? போன்ற கேள்விகளுக்கு உட்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சரியானதும் தெளிவானதுமான முடிவுகள் பெறப்பட்டன. இந்த ஆய்வுமுறை மறுமலர்ச்சியின் துரித முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தன.
கடதாசியின் உபயோகம் - அச்சு இயந்திரத்தின் பயன்பாடு
மறுமலர்ச்சிக் கருத்துக்கள் கண்டுபிடிப்புக்கள் மற்றும் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி முடிவுகள் என்பனவற்றை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பும் கடதாசியின் உபயோகமும்
துணை புரிந்திருந்தன. மறுமலர்ச்சிப் படைப்புக்களையும்
விளைவுகளையும் நூல்வடிவில் பாதுகாக்க இவை பெரிதும் உதவிற்று. ஜேர்மனைச் சேர்ந்த ஜோன் இயந்திரம் அச்சிட்ட கூட்டன்பேர்க் என்பவரால் தொடர்ந்து தொகை யளவில் வாய்பட்டக் கிடைத்தது. இவ்வாறே நூல்களைச்
இதனால் மக்கள் மத்தியில் மறுமலர்ச்சி வேகமாக பரவிக்கொண்டது.
உற்பத்திசெய்யப்பட்டதைத் அச்சிடும் நூல்களை விரைவாக வெளியிடுவதற்கு
கடதாசி உற்பத்திமுறை கண்டுபிடிக்கப்பட்டமையும் நூல்களை சுலபமாக பெற்றுக்கொள்வதற்கும் கல்வியறிவு பரவுவதற்கும் வழிவகுத்தது.
சிலுவை யுத்தம்
ஐரோப்பிய வரலாற்றில் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மதப்போர்கள் சிலுவையுத்தம் என அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவர்கள் தமது சமயத்தைப் பாதுகாக்க புனித சிலுவையை சுமந்துகொண்டு இஎம்லாமியர்களுக்கெதிராக நீண்டகாலம் புத்தங்களில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் மத்தியில்
ஒற்றுமை வளர்ச்சிபெற்றுக்கொண்டது, ஐரோப்பிய கருவூலங்களையும்
கிறிஸ்தவசமயத்தையும் இஸ்லாமியர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள
இந்த ஒற்றுமை துணைபுரிந்தது. இது மறுமலர்ச்சிக்கு உத்வேகத்தைக் கொடுத்திருந்தது.
மறுமலர்ச்சி இயக்கத்தின் செயற்பாடுகள்
மறுமலர்ச்சி இயக்கம் என்பது 15ஆம் நூற்றாண்டில் சொல் செயல் சிந்தனை
என்பவற்றில் அறிவியல் ரீதியாக செயற்பட்டு புதிய மாற்றங்களைக் கண்டிருந்தது. மேலும் அதில் வளர்ச்சியும் ஏற்பட்டுக்கொண்டமையால் மக்கள் புதிய பாதையைக் கண்டிருந்தனர். இதுவே ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கம் எனப்படுகிறது. இந்த இயக்கம் இத்தாலியிலேதான் இயங்கியது. ஏனெனின் இங்கேதான் மறுமலர்ச்சிக்கான அடையாளங்கள் முதன்முதலாக தென்பட்டன. மறுமலர்ச்சியின் அவசியத்தை மக்கள் மத்தியில் உணர்த்தியதோடு மனிதவாழ்க்கையோடு தொடர்புடைய எல்லா விடயங்களிலும் கவனம் செலுத்தியிருந்தது.
0 Comments