*வித்து மரபுப்பெயர்கள்*
ஆமணக்கு - முத்து
மிளகாய் - வித்து
நெல் -மணி
தினை - மணி
கொய்யா - விதை
வேம்பு - விதை/கொட்டை
பலா ,புளி - கொட்டை
கத்தரி - விதை
சோளம்- மணி
பாகல் /பூசணி - விதை
நிலக்கடலை - பருப்பு
பப்பாசி - விதை /கொட்டை
*பிஞ்சுப் பெயர்கள்*
தென்னை - குரும்பை
பனை - குரும்பை
மா - வடு
பலா - மூசு
வாழை - கச்சல்
*இலை மரபுப் பெயர்கள்*
வாழை - இலை
மா - இலை
தென்னை - ஓலை
பனை - ஓலை
நெல் - தாள்
புல் - தாள்
முருங்கை/ பலா/ மா - இலை
கமுகு - ஓலை
ஈச்சை- ஓலை
தாளை - ஓலை
சோளன் - தாள்
*தொகுதி மரபுப்பெயர்கள்*
பூங்கொத்து - மஞ்சரி
வாழை - குலை/ தாறு
முந்திரி - குலை
பனை - குலை
தென்னை - குலை
மா - கொத்து
புளி - கொத்து
நெல் - கதிர்
சோளம் - கதிர்
திராட்சை - குலை
ஈச்சை - குலை
*உள்ளீடு மரபுப்பெயர்கள்*
நெல் - அரிசி
உழுந்து- பருப்பு
மா/வாழை - சதை
கற்றாளை - சோறு
வரகு / நெல் - அரிசி
கோதுமை - அரிசி
அவரை/ துவரை/ பயறு - பருப்பு
பலா / தோடை - சுளை
பயறு - பருப்பு
தினை - அரிசி
*கூட்டத்தைக் குறிக்கும் மரபுப்பெயர்கள்*
அறிஞர் - அவை
நடிகர் - குழு
உடு - திரள்
சுருட்டு - கட்டு
புல் - கற்றை
மலை - தொடர்
மாணவர் - குழாம்
பாடகர் - குழு
புத்தகம் - அடுக்கு
நெல் - குவியல்
தீவு - கூட்டம்
கல் - குவியல்
வைக்கோல் - கற்றை
பல் - வரிசை
திறப்பு - கோர்வை
ஆடு - மந்தை
மான் - கூட்டம்
எறும்பு - கூட்டம், குவியல்
பசு - நிரை
ஆ - நிரை
கள்வர் - கூட்டம்
ஆனை - பந்தி
படை - அணி
புகையிலை - சிப்பம்
ஒளி - கற்றை
சனம் - கும்பல், கூட்டம்
நாற்று - பிடி
நாடகம் - சபை, குழு
நூல் - பந்து
படைவீரர் - அணி
பூ - கொத்து, மஞ்சரி
மலர் - செண்டு
மணி - மாலை
மரம் - சோலை, காடு
மலர் - மாலை, செண்டு
மலை - தொடர்
யானை - பந்தி
பூதம் - கணம்\
உயிர் - தொகுதி
சேனை - திரள்
தென்னை - தோப்பு
மா - சோலை, தோப்பு
முத்து - குவியல்
மக்கள் - தொகுதி
குண்டர் - கும்பல்
காவல் - படை
மயில் - குழாம்
முகில் - கூட்டம்
*பிற மரபுச் சொற்கள்*
ஆடு மேய்ப்பவன் - ஆயன், இடையன்
மாடு மேய்ப்பவன் - இடையன்
தேர்செலுத்துபவன் - பாகன்
விமானம் செலுத்துபவன் - வலவன்
கப்பல் செலுத்துபவன் - மாலுமி, மீகாமன்
யானை செலுத்துபவன் - பாகன்
குதிரை செலுத்துபவன் - பாகன்,தோட்டி
மாடு,எருமை என்பவற்ற்றின் மலம் - சாணம்
ஆட்டு மலம் - பிழுக்கை
கழுதை மலம் - விட்டை
காகம், குருவி(பறவைகளின்) என்பவற்றின் மலம் - எச்சம்
யானை, குதிரை, ஒட்டகம் என்பவற்றின் மலம் - இலத்தி
வைக்கோல் அடுக்கப்பட்டிருப்பது - போர்
புகையிலை அடுக்கப்பட்டிருப்பது - சிப்பம்
கருவாடு அடுக்கப்பட்டிருப்பது - பாடம்

0 Comments