பாடசாலைகளுக்கு வழங்கப்பட திட்டமிடப்பட்டிருந்த விடுமுறைகளில் மாற்றம் ! ஏற்படவுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பரில் விடுமுறை வழங்கப்பட்டு, அக்காலப்பகுதியில் க.பொ.த உயர் தரப்பரீட்சையை நடாத்தி முடிப்பதற்காக ஏற்னவே திட்டமிடப்படிருந்த போதிலும், தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பாடசாலை விடுமுறையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி டிசம்பரில் வழங்கத் திட்டயிடப்பட்டிருந்த விடுமுறையை ஜனவரி மாத்திற்கு மாற்றுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது எனினும், டிசம்பர் இறுதியில் ஓரிருதினங்கள் விடுமுறை வழங்கப்படலாம்.எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு ஏற்கனவே பல தடவைகள் திருத்ததங்கள் செய்யப்பட்ட பாடசாலை தவணைக் கலண்டரில் மீண்டும் இருக்தம் செய்யப்படவுள்ளதாகவும் அதன் படி, திருத்தப்பட்ட தவணைக் கலண்டர் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments