Ticker

6/recent/ticker-posts

Ad Code

Facebook

தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி



தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி 

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும்தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம்.டி தர்மசேன, பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பகுதி ஒன்றுவினாப்பத்திரமே முதலில் வழங்கப்பட்டது.  பகுதி ஒன்று வினாப்பத்திரம் என்பது  நுண்ணறிவு வினாக்களை கொண்டதாகும்.

பகுதி ஒன்று வினாப்பத்திரம் கடினமானது  என்பதால் பாட விடயதானங்கள் அடங்கியபகுதி இரண்டின் வினாப்பத்திரத்தை முதலில் வழங்குமாறு  பெற்றோர்களால் கோரப்பட்டிருந்ததாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டிதர்மசேன  தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments

Comments

Ad Code

close