தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு இன்று (14)நள்ளிரவு தோற்றும் மாணவர்களுக்கானபயிற்சி வகுப்புகள், விரிவுரைகள்,கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதேவேளை புலமைப்பரிசில் பரீட்சை வினாக்கள் வழங்கப்படும் என தெரிவித்து சுவரொட்டிகள், பதாகைகள், கையொப்பங்கள்,இலத்திரனியல், அச்சிடப்பட்ட ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களை வெளியிடவோஅல்லது வைத்திருப்பதையோ பரீட்சைகள் திணைக்களம் தடை செய்துள்ளது.
0 Comments