தரம் 05 புலமை பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பு
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு
தோற்றும் மாணவர்கள் தங்களுக்கான
பரீட்சை நிலையத்துக்கு செல்வதில்
அசௌகரியத்தை எதிர்கொண்டால்,
அருகில் உள்ள வேறு பரீட்சை
நிலையத்துக்கு சென்று பரீட்சைக்கு தோற்ற
முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்
ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்
கொண்டு இந்த தீர்மானம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை
தொடர்பில் இடம்பெற்ற விசேட
கலந்துரையாடலின் போதே, அவர் இந்த
அறிவிப்பை விடுத்துள்ளார்.
0 Comments