வரலாற்று சாதனை படைத்த கிரிந்தை முஸ்லிம் மகா வித்யாலயம்
மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான காற்பந்து போட்டியில் 18 வயதின் கீழ் பிரிவில் ஹ/கிரிந்தை முஸ்லிம் மகா வித்யாலயம் 1ம் இடத்தை பெற்றுக் கொண்டது.
காலியில் இடம்பெற்ற இப் போட்டியில் வெலிகம அறபா தேசிய பாடசாலையை வீழ்த்தி முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டதன் மூலம் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப் பட்டுள்ளது .
இதற்காக முழு பங்களிப்பை வழங்கிய அப் பாடசாலையின் அதிபர் ,உப அதிபர் ,பொறுப்பு ஆசிரியர்கள் பயிற்சிவிப்பாளர் ,ஏனைய ஆசிரியர்கள்,மற்றும் பழைய மாணவர்கள் ஆகிய அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு , தேசிய மட்டத்திலும் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகின்றோம்.
அப் பாடசாலையில் காற்பந்துக்கான தனி பயிற்சியாளர் இல்லாத போதிலும் இவ் வெற்றியை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments