விடுகதைகள்
1. கூடவே வருவான்... ஆனால் ஒரு உதவியும் செய்ய மாட்டான்... யார் இவன்?
2. சின்னப் பெட்டிக்குள் கீதங்கள் ஆயிரம் ஆயிரம்...இது என்ன?3. உலகமே உறங்கினாலும்கூட இவர்கள் ஓடிப்பிடித்து விளையாடுவார்கள்... யார் இவர்கள்?
4. நாலு கால் உண்டு... ஆட்ட வால் இல்லை... இது என்ன?
5. கடல் நீரில் வளர்ந்து, மழை நீரில் மடிவது... இது என்ன?
6. ஆடாமல் பாடுவான்... அசையாமல் பேசுவான்... யார் இவன்?
7. கையிலே அடங்கும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை...
8. ஊளையிடும் ஊரைச் சுமக்கும்... இது என்ன?
9. உலகில் மெலிந்தவன் உடுப்பைக் காப்பான்...
விடைகள்:
1. நிழல்
2. ஆர்மோனியப் பெட்டி
3. கடிகாரத்தில் சின்ன முள் பெரிய முள்
4. நாற்காலி
5. உப்பு
6. ரேடியோ
7. புத்தகம்
8. புகைவண்டி
9. தையல் ஊசி
0 Comments