Ticker

6/recent/ticker-posts

Ad Code

Facebook

பழமொழிகளும் அதன் கருத்துக்களும் | Grade - 04,05



பழமொழிகளும் அதன்  கருத்துக்களும்

Grade   - 04,05

Subject - Tamil

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு -  ஒற்றுமையே பலம்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு - எதையும் அளவோடு அனுபவித்தல் வேண்டும்

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது - முக்கியமானவர் இன்றி எக்கருமமும் நடைபெறாது

அடிநாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் அமிர்தமும் - உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல்

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் - விடாமுயற்சி வெற்றி அளிக்கும்

அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம் - உண்மை நட்பு

அரைக்காசுக்கு அளிந்த கற்பு 1000 பொன் கொடுத்தாலும் வராது - கற்பின் பெருமை

ஆழமறியாது காலை விடாதே - எதையும் ஆராய்ந்து பார்த்து செய்தல் வேண்டும்

ஆனைக்கும் அடி சறுக்கும் - பெரியவர்களுக்கும் தவறு ஏற்படலாம்

ஆடத்தெரியாதவன் அரங்கு கோணலென்றானாம் - விடயத்தெளிவின்றி எதையும் குறை கூறாதே

ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை - அற்பனுக்கு மதிப்பு

ஆனைக்கொரு காலம் பூனை்கொரு காலம் - காலம் மாறலாம்

ஆழ அமுக்கினாலும் நாழி முகவாகாது - கொள்ளக்கூடிய அளவே கொள்ளும்

இளமையில் கல்வி சிலையில் எழுத்து - இளமையில் கற்பது என்றும் நிலைத்திருக்கும்

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை - திருப்தியற்ற மனம்

இட்டுக்கெட்டார் எவருமில்லை - உதவி செய்து கெட்டுப்போனவர் எவருமில்லை

இளங்கன்று பயமறியாது - வாலிபத் துணிவு

இறைத்த கிணறே ஊறும். இறையாத கிணறே நாறும் - தருமத்தின் பெருமை

பணம் பாதாளமட்டும் பாயும் - பணத்தின் வலிமை

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? - தகுதிக்கு மேலே எண்ணாதே

உறியில் நெய் இருக்க  ஊரெல்லாம் நெய்க்கு அலைவானேன் - வேண்டியதை தன்னிடம் வைத்துக்கொண்டு ஏனையோரிடம் வேண்டல்

உடையவன் பாரா வேலை ஒருமுழம் கட்டை - உரியவன் இல்லாக் கருமம் குறைப்படல்

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் - பிறர் குழப்பத்தில்  மகிழ்வடைதல்

ஊசி போகுமிடம் பார்ப்பார் உலக்கை போகுமிடம் பாரார் - சிறிய விடயங்களில் கவனம் செலுத்துமளவு பெரிய விடயங்களில் கவனயீனமாக இருத்தல்

எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு - வீண் பெருமை

எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை எடுப்பானா? - உலோபித்தனம்

எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன? - ஈகையின் அவசியம்

எய்தவன் இருக்க அம்பை நோவானேன் - தப்பபிப்பிராயம்

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் -  ஏழ்மை கண்ணீரின் வலிமை

ஐந்து பணத்திற்கு குதிரையும் வேண்டும் ஆறு கடக்க பாயவும் வேண்டும் - பேராசை

ஐயர் வருமட்டும் அமாவாசை காத்திருக்குமா - காலம் நில்லாது

ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகுமோ ?  - கூட்டு முயற்சியின் முக்கியத்துவம்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - ஒற்றுமையாக இருந்தால் எதனையும் சாதிக்கலாம்

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகுமா ? - தகுதிக்கு மேலே எண்ணுதல்

கடுகு சிறிதானாலும் காரம் பெரிது - சிறியதெனினும் சிறப்புண்டு

கந்தையானாலும் கசக்கி கட்டு - தூய்மையாக இருத்தல் , வறுமையில் இருந்தாலும் செம்மையாக வாழ வேண்டும்

கரும்பு தின்னக் கைக்கூலியா - 

காகம் திட்டி மாடு சாகாது - வீண்பழிக்கு அஞ்சேல்

கிட்டாதாயின் வெட்டென மற- கிடைப்பதற்கு அரிதாக இருந்தால் உடனே மறந்து விடுவது நல்லது

கிணற்றுத்தவளைக்கு நாட்டு வளப்பமேன் - உலகை அறி

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் - மனசாட்சி உறுத்தல்

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை - பேராசை

கெட்டாலும் செட்டி கிளிந்தாலும் பட்டு - புகழ் மங்காது

கெடுவான் கேடு நினைப்பான் - அழிவு அழிவை தரும்

குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர் - வீண் பெருமை

குப்பையிலே கிடந்தாலும் குன்றுமணி மங்காது - நற்புகழ் மங்காது

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - பண மதிப்பு

கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? - தெளிவு

கொல்லர் தெருவில் ஊசி விற்கலாமா? - இடமறியா மடமை

Post a Comment

0 Comments

Comments

Ad Code

close